கல்வித்துறையால் அனுமதிக்கப்படாத சாதி மற்றும் மத ரீதியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்படி மாணவர்களை கல்லூரிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மதுரையில் உள்ள யாதவா கல்லூரியில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அழகுமுத்துக்கோனின் ஜெயந்தி விழாவின்போது தனிப்பட்ட நபர் மற்றும் அழகுமுத்துக்கோனின் புகைப்படம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை அணியுமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இதுபோன்ற நிகழ்வை தடுக்க உத்தரவிடக் கோரிய மனுவை விசாரித்த நீதிமன்றம், கல்லூரி வளாகத்தில் சாதிய அடையாளங்களை வைக்க கூடாது என்றும், கல்லூரி நிர்வாகம் அதனை மீறினால் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டது.