வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைக்கு சொந்தமான 34 ஏக்கர் நிலம் யாருடைய பெயரில் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தது ஆஜரான அரசு வழக்கறிஞர், வள்ளலார் சத்தியஞான சபைக்கு தானமாக வழங்கப்பட்டு, ஆக்கிரமிப்பில் உள்ள 27 ஏக்கர் நிலங்களை கண்டறிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.107 ஏக்கர் நிலத்தில் 71 ஏக்கர் நிலம் மட்டுமே வள்ளலார் தெய்வ நிலையம் என்ற பெயரில் உள்ளதாகவும், மீதமுள்ள நிலம் தனிநபர் பெயரில் பட்டா வழங்கப்பட்டு, அந்த நிலத்தில் கடைகள், மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.இதனை சட்டவிரோதம் என கூறிய நீதிபதிகள், அந்த நிலங்கள் யார் பெயரில் உள்ளது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் செப்டம்பர் 12-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும் படி கடலூர் ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.