திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத குவாரியை மூட உத்தரவிடக் கோரிய வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்டவிரோத குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்தார்.