119 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிய வழக்கில், தமிழக வருவாய்த்துறை செயலர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர், மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்காததால், தென்காசி ஆட்சியர் அலுவலகம் பயன்பாட்டிற்கு வராமல், மோசமான நிலையில் உள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு, கட்டிடப் பணிகள் முடிந்து இவ்வளவு காலம் ஆகியும் திறக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.