இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் குறித்த நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத வழக்கில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை இடித்து விட்டு புதிய சுகாதார மையம் அமைக்க உத்தரவிட்டு ஓராண்டாகியும், நிறைவேற்றப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிதிலமடைந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? என்று கேள்வி எழுப்பினர்.