மத மோதலை தூண்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில், பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் சார்பில் பழங்காநத்தம் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறி பேசி, மத மோதலை தூண்டியதாக ஹெச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்காக காவல்துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து, ஹெச்.ராஜா தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர அதிகாரம் இல்லை என தள்ளுபடி செய்தது. இதையும் படியுங்கள் : சொத்துக் குவிப்பு வழக்கில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்..