ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கணவன் மற்றும் மகனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஆற்காடு அடுத்த தாஜ்புரா பகுதியை சேர்ந்த தீபிகா என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது கணவர் ராஜா மற்றும் ஒரு வயது மகன் பிரணேஸ்வரன் ஆகியோரை கொலை செய்த வழக்கில் ராணிப்பேட்டை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம், தீபிகாவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை, 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என 33 ஆண்டுகள் சிறையில் அடைக்கவும், 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளது. இதைத் தொடர்ந்து தீபிகா வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.