தென்காசி மாவட்டம் இலத்தூர் பகுதியில் பெண்ணை எரித்து கொலை செய்த வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகாசியை சேர்ந்த கமலி என்பவரின் உடல் கடந்த 11 ஆம் தேதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரை கொலை செய்த கணவன் ஜான் கில்பர்ட் மற்றும் அவரது சகோதரரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய ஜான்கில்பர்ட்-ன் தந்தை ஜான் ஜெரால்ட், தாய் ஜெனிபர், உறவினர் ஞான சௌந்தரி ஆகிய மூன்று பேரை தேடி வந்த போலீசார், அவர்களை கைது செய்து செங்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுனில் ராஜா முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.