திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் அருகே கடந்த 2007-ஆம் ஆண்டு வீடு புகுந்து தொழிலதிபரை கொலை செய்து விட்டு கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள அஸ்வின் குமார், நாராயணதாஸ் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.