சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே லாரியின் பின்புறத்தில் மகேந்திரா சரக்கு வாகனம் மோதிய பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது. எம்.செட்டிபட்டி பிரிவு சாலையில், சிக்னல் போடாமல் லாரி ஒன்று திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது, பின்னால் வந்த சரக்கு வாகனம் அதன் மீது மோதியது. இதில், சரக்கு வாகனத்தின் முன்பக்கம் நொறுங்கி உருக்குலைந்த நிலையில், அதன் ஓட்டுநர் காயத்துடன் தப்பினார்.