வானகரம் சுங்கச்சாவடியில், போரூரில் இருந்து வரும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையில், தவறான திசையில் வருவதால் தொடர் விபத்து நிகழ்வதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், போரூர், அய்யப்பன்தாங்கலில் இருந்து வரும் வாகனங்கள், வானகரம் சுங்கச்சாவடி வழியாக தாம்பரம் செல்ல வேண்டும் என்றால் மதுரவாயல் - தாம்பரம் புறவழி சாலையில் சென்று, மதுரவாயல் மேம்பாலம் மீது ஏறி, மீண்டும் போரூர் நோக்கி வானகரம் சுங்கச்சாவடியை கடக்க வேண்டும்.ஆனால், இதற்கு அதிக நேரம் மற்றும் எரிபொருள் செலவாகும் என்பதால், பெரும்பாலான வாகனங்கள் சுங்கச்சாவடி அருகே தவறான திசையில், யு-டேர்ன் செய்து வருகின்றனர். இதனால் அடிக்கடி இங்கு விபத்து ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில், போரூரில் இருந்து மதுரவாயல் செல்ல போக்குவரத்து விதிகளை பின்பற்றி காரில் செல்லும் ஒரு வாகனத்தை தவறான திசையில் ஒரு வழிப்பதையில் வந்த இருசக்கர வாகனம் மோதியது. இது போக்குவரத்து விதிகளை பின்பற்றுபவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே, போக்குவரத்து போலீசார் இதனை கண்காணிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.