செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் கார் கண்ணாடியை உடைத்து பணம், நகை, செல்போன் ஆகியவற்றை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் குடும்பத்துடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது, மேல்மருவத்தூர் கோவில் அருகே காரை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, 3 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் ஆகியவை திருடு போனதை அறிந்து மேல்மருவத்தூர் போலீசில் புகார் அளித்தார்.