சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே கோவில் வெளியே நின்றிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. காரின் முன் பகுதியில் இருந்து புகை வருவதை கண்ட ஓட்டுநர், காரிலிருந்து இறங்குவதற்குள் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. மளமளவென பரவிய தீயில் கார் முழுவதும் பற்றி எரிந்ததால், அப்பகுதியை கரும்புகை சூழ்ந்தது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.