சூலூர் அருகே ரங்கநாதபுரத்தில் திருச்சி சாலையில் ஜெய் கிருஷ்ணா மாருதி ஷோரூம் எனும் நிறுவனத்தில் புதிய கார் விற்பனை மற்றும் பழைய கார்களுக்கு பொழுது நீக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு புதன்கிழமை அதிகாலை சுமார் 3 மணி அளவில் தீ பற்றியது அந்த தீயானது மள மளவென பரவி அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு தீ பரவியது. உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிவோர் முதல் கட்டமாக தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர் மேலும் தீயணைப்பு படை மற்றும் காவல் துறையினருக்கு காவல் தெரிவித்தனர். அங்கு வந்த சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டிடத்தின் மேல் கூரை இடிந்து விழுந்தது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பத்துக்கு மேற்பட்ட கார்கள் தீயில் கருகி சேதமானது. சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ராஜ் கோபால் மற்றும் ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். ஷோரூம் க்குள் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட கார்கள் ஊழியர்கள் அப்புறப்படுத்தி பாதுகாத்தனர். இந்த தீ விபத்தால் கார்களை பழுது நீக்கும் பகுதி மற்றும் கார் விற்பனை பிரிவு உதிரி பாகங்கள் வைக்கும் அறை கணணி அறை ஆகியவற்றில் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். மேலும் அதிகாலை நேரம் என்பதால் ஊழியர்கள் இல்லாத நேரம் என்பதாலும் எவ்வாறு தீப்பிடித்தது எங்கு தீ பிடித்தது என்பதை கண்டறிய இயலவில்லை தீ ஜுவாலை மற்றும் புகை வெளியே தெரிந்த பின்பு தீ பற்றிய தகவல் பரவியது.