ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் திருமண நாளை கொண்டாட ஊருக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆரூர் கிராமத்தை சேர்ந்த புருஷோத்தம்மன், சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். 3 ஆம் ஆண்டு திருமணநாளை கொண்டாட பூ, பழங்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான தின்பண்டங்களை வாங்கி கொண்டு பைக்கில் சென்றவர் மீது பாப்பேரி அருகே எதிரே வந்த கார் மோதியது. இதில் புருசோத்தம்மன் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்