திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே ஆம்னி வேன் மீது கார்மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்தவர்கள் பலத்த காயமடைந்தனர். பூலுவபட்டி நால்ரோடு பகுதியில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து பெருமாநல்லூர் நோக்கி வந்த ஆம்னி வேன் மீது கோபி சாலையில் இருந்து அவிநாசி சாலையில் செல்ல முயன்ற கார் வேகமாக மோதியதில் ஆம்னி தலைகுப்புற கவிழ்ந்தது. சாலை ஓரத்தில் நின்றிந்த காவலர்களும் நூலிழையில் உயிர்தப்பிய நிலையில் ஆம்னி தலைக்குப்புற கவிழ்ந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.