விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே லாரியின் மீது கார் மோதிய விபத்தில் கோவில் பூசாரி படுகாயமடைந்தார். கோவையை சேர்ந்த ஸ்ரீநாத், சொந்த வேலையாக காரில் திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அருப்புக்கோட்டை சாலையில் கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த லாரியின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஸ்ரீநாத் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.