கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே வேகமாக சென்ற கார் எதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில் அதில் வந்தவர்கள் சாலையோரம் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. காவேரிப்பட்டிணம் நோக்கி அதிவேகமாக சென்ற கார், கோணனூர் கிராமம் அருகே வந்த போது கட்டுபாட்டை இழந்து, எதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பைக்கில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அப்பகுதியினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.