நத்தம் அருகே பைக் மீது கார் மோதி ஒருவர் காயமடைந்த நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குட்டூரை சேர்ந்த தினகரன் மற்றும் சேர்வீடு பகுதியை சேர்ந்த மணி ஆகிய இருவரும் பைக்கில் குட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த இன்னோவா கார் பைக் மீது மோதியது. இதில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த மணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக கார் ஓட்டுநர் ராஜசேகரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.