தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருச்சியை சேர்ந்த ரகுநாதன் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு காரில் சென்றனர். சிந்தலக்கரை பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற சிறுவன் உட்பட 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.