சென்னை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், ஓட்டுநர் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர்தப்பினார்.புகழேந்தி என்பவர் ஓட்டிச் சென்ற கார் வேலப்பன்சாவடி சிக்னல் அருகே சென்றபோது, காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது.உடனடியாக காரை ஓரமாக நிறுத்திய புகழேந்தி கீழே இறங்கி பார்த்த நிலையில், காரில் தீப்பிடித்து எரியத் துவங்கியது.தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலுமாக எரிந்து சேதமானது.