கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே, காரும்- பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட கட்டடத் தொழிலாளி உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பூட்டேறி பகுதியை சேர்ந்த கட்டடத் தொழிலாளியான சுரேஷ், தனது மனைவி மற்றும் 12 வயது மகளுடன் நாகர்கோவிலில் இருந்து பூட்டேறிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோதியதில், பைக்கில் இருந்து மூவரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியான நிலையில், விபத்து தொடர்பான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.