தேனி மாவட்டம் போடி மெட்டு மலைச்சாலையில் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்ற குடும்பத்தினர் நூலிழையில் உயிர்தப்பினர்.