திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தடுப்பு சுவர் மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாணியம்பாடி நூருல்லாப்பேட்டை பகுதியை சேர்ந்த நசீர் அஹமது ஆதில் என்பவர் கனடாவில் பணியாற்றி வந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு விமானம் மூலம் பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இவரை பெங்களூரில் இருந்து அழைத்துக் கொண்டு வந்த சென்னாம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜபரூல்லா, ஆத்தூர் குப்பம் பகுதியில் வந்துகொண்டிருந்த போது, கார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த நசீர் அஹமது ஆதில் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.