விருதுநகர் மாவட்டம் இனாம் ரெட்டியபட்டி விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் படுகாயமடைந்தனர்.