விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சாவை சாக்லேட் பேப்பரில் சுற்றி எடுத்து சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவல் அடிப்படையில் சமத்துவபுரம் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் வீரமணிகண்டன, முத்துராமன் ஆகியோரை கைது செய்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.