நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 953 கிலோ கஞ்சாவை போலீசார் அழித்தனர். மதுரை மாநகரத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 218 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 953 கிலோ கஞ்சா விஜயநாராயணம்,அடுத்த பொத்தையடி கிராமத்தில் உள்ள பயோமெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் கம்பெனிக்கு கொண்டு வரப்பட்டது. மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் தலைமையிலான போலீசார் கஞ்சாவை தீயில் இட்டு அழித்தனர்.