கட்டட வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய அழுத்தம் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு வியாபாரிகள் சங்கத்தின் நன்றி தெரிவித்துள்ளனர். வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ததற்காக மத்திய நிதி அமைச்சருக்கும், பிரதமருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் அருண் கூறியுள்ளார்.