கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சக்கர நாற்காலி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதியடைந்தனர்.