திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கன்டெய்னர் லாரியில் இருந்த கண்டெய்னர் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள சோதனை சாவடி வளைவை கடந்து வந்த லாரியில் இருந்த கண்டெய்னர் திடீரென தவறி விழும் காட்சி எதிரே இருந்த கடையின் சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.