தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் உலர் திராட்சை உள்ளிட்ட பொருட்களை கொண்டு கேக் தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் உற்சாகமாக ஈடுபட்டனர். டி.எஸ்.எம். கிராண்ட்ஸ் பிளாசா ஹோட்டலில் கேக் தயாரிக்கும் கலைஞர்கள், கேக் தயாரிப்பதற்காக முந்திரி, பாதாம், வால்நட் உள்ளிட்ட 90 கிலோ பொருட்களை ஊற வைத்தனர். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இன்னும் 60 தினங்கள் உள்ள நிலையில், இந்த கேக் தயாரிக்கும் பணி துவங்கியது. ஹோட்டல் உரிமையாளர்கள், கேக் தயாரிக்கும் கலைஞர்கள், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்தபடி, ’ஹேப்பி கிறிஸ்மஸ்’ என்று உற்சாக குரல் எழுப்பியபடி, கேக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கேக் சுமார் 50 நாட்கள் ஊற வைக்கப்பட்டு, பின்னர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பத்து நாட்களுக்கு முன்பு சுவையான 350 கிலோ எடை கொண்ட கேக்காக தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.