அமைச்சரவை மாற்றம் என்பது முதலமைச்சரின் முடிவு எனவும் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார். உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வந்தவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றார். மேலும், இளைய சமுதாயம் வருகிறது, அது நமக்கு ஓடியாடி வேலை செய்யப் போகிறது என பொதுமக்களும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.