கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக முட்டைக்கோஸ் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதோடு, விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். ஒரு மூட்டை முட்டைக்கோஸ் ஆயிரத்து 200 ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.