புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பட்டப்பகலில் தனியாக இருந்த இளம்பெண்ணை தாக்கி, கட்டிப்போட்டு விட்டு 34 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நைனாபட்டி கிராமத்தை சேர்ந்த ராதா, குளிக்க சென்றபோது, கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி ஆசாமிகள் 2 பேர் அவரை தாக்கி கொள்ளையடித்துச் சென்றனர்.