தமிழகம் முழுவதும், நாளை நடக்க இருக்கும் கிராம சபை கூட்டத்திற்கு, வீடு வீடாக சென்று துண்டறிக்கையை தூய்மை பணியாளர்கள், வழங்கினர். கிராம சபை நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுடன் நேரடியாக காணொலி காட்சி மூலம் உரையாடுவதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்பாடு, வேகமாக நடைபெற்று வருகிறது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மூலப்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம், நாளை 11.10.2025 அன்று காலை 11 மணி அளவில், தனி அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், ஒலி பெருக்கியுடன் வீடு வீடாக சென்று, அப்பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவரும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு துண்டறிக்கையை வழங்கினர்.