தவெக மாநாட்டுக்கு சென்றபோது விபத்தில் உயிரிழந்த அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் இருவரின் உடலுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அஞ்சலி செலுத்தினார். அப்போது தவெக தலைவர் விஜய் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டி புஸ்ஸி ஆனந்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.