தேனியில் தொழிலதிபரை கடத்தி பணம் பறிக்க முயன்றதோடு, ஓடும் காரில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த 6 பேர் கும்பலுக்கு மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. தேனி ராயப்பன்பட்டியை சேர்ந்த கோழிப்பண்ணை அதிபர் அதிசயம் என்பவரை, கடந்த 2023-ஆம் ஆண்டு 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி பணம் பறிக்க முயன்றபோது, போலீஸார் துரத்திச் சென்றதால் ஓடும் காரில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டனர்.