திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தொழிலதிபர் வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி தொடர்பாக மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். நீலிக்கொல்லை புதிய தெரு பகுதியில் வசித்து வரும் தோல் தொழிற்சாலை தொழிலதிபர் இம்தியாஸின் வீட்டிற்குள் பட்டப்பகலில் நுழைந்த மர்ம நபர்கள், அவரையும், அவரின் மனைவி, பணியாளர் சக்திவேல் ஆகியோரை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்றனர். இம்தியாசின் மனைவி கூச்சலிட்டதால் அங்கிருந்த செல்போனை எடுத்து கொண்டு கொள்ளையர்கள் தப்பினர். சந்தேகத்தின் பேரில் சக்திவேலிடம் விசாரித்ததில், நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்ததையடுத்து, அவருடன் காவலர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக அரக்கோணத்தை 3 பேர் கைதாகியுள்ளனர்.