செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில், காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம் பேசுவதற்கு முன்பே, கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், பாதியிலேயே எழுந்து சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்து வெளியேறிய பெண்கள், தங்களை 4 மணிக்கு வரவழைத்ததாகவும், வந்ததற்கு 300 ரூபாய் தருவார்கள் என சைகை மூலம் வெளிப்படுத்தி சென்றனர்.