வேடசந்தூர் அருகே 14 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து இயக்கப்பட்டது, பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா சிங்கிலிக்காம்பட்டியில் 14 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் பள்ளி மாணவ, மாணவியர், முதியோர், பெண்கள் மிகவும் சிரமமடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜனிடம் கோரிக்கை வைத்தனர் இதுசம்பந்தமாக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததின் பெயரில் இன்று காசி பாளையத்திலிருந்து சிங்கிலிக்காம்பட்டி வரை புதிய பேருந்து வழித்தடத்தை சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் கொடியசைந்து துவங்கி வைத்தார் அதன் பின்னர் பேருந்தில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து பயணம் செய்தார். வேடசந்தூர் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.