கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வரி செலுத்தாமல் இயக்கப்பட்டு வந்த தனியார் பேருந்தை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கேரளாவில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த தனியார் பேருந்தை சோதனை செய்த போது போக்குவரத்து துறைக்கு செலுத்த வேண்டிய சாலை வரி, பர்மிட் உள்ளிட்ட எந்தவிதத் தொகையும் கட்டாமல் வரி ஏய்ப்பு செய்து பேருந்து இயக்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.உளுந்தூர்பேட்டை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து பேருந்தில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்ட பயணிகளை நடுவழியில் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் செய்வது அறியாமல் தவித்த பயணிகள் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து மாற்று பேருந்து மூலம் சென்றுள்ளனர்.