மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞர் வைரமுத்து எனபவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலியின் தாயை போலீஸார் கைது செய்தனர். அடியமங்கலத்தை சேர்ந்த வைரமுத்து காதல் விவகாரத்தில் கடந்த 15 ஆம் தேதி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் காதலியின் தாயார் மீது எஸ்.சி.எஸ்.டி பிரிவில் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஏற்கனவே, காதலியின் சகோதரர் குகன், சித்தப்பா பாஸ்கர், அதே பகுதியை சேர்ந்த அன்பு நிதி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.