கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தனியார் சொகுசு பேருந்து, முன்னால் சென்ற சரக்கு லாரியின் மீது விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சென்னையிலிருந்து பொள்ளாச்சிக்கு சென்ற தனியார் சொகுசு பேருந்து விருத்தாசலம் சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற சரக்கு லாரியின் மீது மோதியது. இதனால் சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.