கோவை மாவட்டம் சூலூரில் பேருந்து நிறுத்தத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி, சூலூரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரே மாதிரியாக சட்டை அணிந்து, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில், பெருத்த அளவில் ஒலி எழுப்பியபடி உலா வந்தனர். மேலும், பாப்பம்பட்டி பிரிவு அருகே திரண்ட இளைஞர்கள், பேருந்து நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தி, பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்தனர். இதை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில், இளைஞர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.