சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலத்தில் உள்ள குடிசை வீடு மின் கசிவு காரணமாக தீ பற்றி எரிந்ததில் 2 லட்சம் ரொக்கம், உள்ளிட்ட பொருட்கள் தீக்கு இரையாகின. பேரன் பேத்திகளுக்கு காது குத்துக்காக சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த 2 லட்சம் பணம் உள்ளிட்ட அனைத்து பொருளும் தீயில் கருகியதாக பெண் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.