சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள வனப்பகுதியில் 2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. பட்டிபாடிவேலூர் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால், அங்குள்ள அரியவகை மூலிகை மரங்கள் மற்றும் செடி கொடிகள் கொளுந்துவிட்டு எரிந்து நாசமாகின.