அரபிக் கடலில் மூழ்கிய கன்டெய்னர் கப்பலில் இருந்து குமரி மாவட்டம் ஹெலன் நகரில் மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் துகள்கள் கரை ஒதுங்கியது. கடந்த 24ஆம் தேதி கப்பல் நடுக்கடலில் விபத்துக்குள்ளானதையடுத்து குமரி மாவட்டம் வாணியகுடி கடற்கரையில் ஒரு கண்டெய்னர் கரை ஒதுங்கியது. இந்நிலையில், ஹெலன் நகர் கடற்கரையில் பிளாஸ்டிக் துகள்கள் மூட்டை மூட்டையாக கரை ஒதுங்கியது. இதனால் கடல் மீன் வளத்திற்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.