திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக, பதுக்கி வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சுதந்திர தினத்தன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை என்பதால், கூடுதல் விலைக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்ய, முட்புதர்கள், குப்பைகளில் மறைத்தும், மண்ணில் புதைத்தும் வைக்கப்பட்ட 250 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.