மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியானது மஞ்சமலை ஆற்றில் அமைந்துள்ள வாடிவாசலில் நாளை நடைபெற இருக்கிறது இதற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சுமார் காலை 7 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ள தமிழக துணை முதல்வரை வரவேற்க வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளையும் வைத்து சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர் மேலும் ஜல்லிக்கட்டு பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற வந்த நிலையில் தற்போது அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ளது தற்போது வாடிவாசல் முன்பு ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் காவலர் உட்பட வாடிவாசல் முன்பு நின்று செல்பி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் வழங்கப்பட உள்ளது சிறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு டிராக்டர் மற்றும் கன்றுடன் கூடிய நாட்டின பசுமாடு வழங்கப்பட உள்ளது மேலும் இரு சக்கர வாகனம் தங்க காசு கட்டில் பீரோ மெத்தை ரொக்க பணம் என எண்ணற்ற பரிசுகள் வழங்க உள்ளனர் தற்போது வாடிவாசல் கேலரி அமைத்தல் மற்றும் காளைகள் சேகரிப்பு மையம் பார்வையாளர் அமர்ந்து பார்க்கக்கூடிய கேலரி துணை முதல்வர் அமர்ந்து பார்க்கக்கூடிய பிரத்தியேக மேடை வீரர்கள் மருத்துவ குழு அமர்வதற்கான இடம் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை செய்வதற்கான இடம் மற்றும் குடிநீர் கழிவறை அனைத்து பணிகளும் தற்போது நிறைவு பெற்று உள்ளது இந்த உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியானது நாளை காலை தமிழக துணை முதல்வர் காலை 7 மணி அளவில் தொடங்கி வைக்க உள்ளார் மாலை 5 மணி அளவில் நிறைவு வரும் மற்றும் 17 தேதி நடைபெறுகிற உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் போட்டியை தொடக்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதையும் படியுங்கள் : சர்தார்-2 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு