சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் தாறுமாறாக ஓடிய மாட்டுவண்டி, சாலையோரம் நின்றிருந்தபெண் மீது ஏறி இறங்கியது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு அச்சரம்பட்டியில் நடத்தப்பட்ட மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய, சிறிய மாடுகள் என 38 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. போட்டியில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை திரண்டு இருந்த மக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.